கள்ளச் சந்தையில் களை கட்டும் ரெம்டெசிவிர் விற்பனை
தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்புகள் 16000த்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்ததும் முதலில் மருத்துவர்கள் அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளைத் தான் பரிந்துரைத்து வருகின்றனர். ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்தாது என ஆய்வுகள் தெரிவித்தாலும் மருத்துவர்கள் அதைத் தான் பரிந்துரைக்கிறார்கள்.
இதனால், இந்த மருந்தை வாங்குவதற்காக பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் இந்த மருந்தை கள்ள சந்தைகளில் விற்று வருகின்றனர்.
தாம்பரத்தில், நேற்று மருத்துவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று மருந்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்ற மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.