வெற்றிக் கொண்டாட்டத்தை விட உயிர் தான் முக்கியமானது – ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வெற்றிக் கொண்டாடங்களுக்கு நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

இது குறித்து, தனது உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. அதில், 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.

வாக்கு என்னும் இடங்களில் குவிந்து சாதகமான முடிவுகள் வர வர ஒன்று கூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கில் தொற்றுக்கு ஆளாகி விட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு.

கழக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம். நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…