அறியா சிறுமிக்கு நேர்ந்த சோகம்… 30 பேரில் மூவர் மட்டுமே கைது!

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் பெற்றோர் வேலைக்குச் சென்றவுடன் தனிமையாக இருந்து வந்துள்ளார். அந்த சிறுமியிடம் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் ஆசைவார்த்தைக் கூறி வெளியே அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்,
இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இந்த இளைஞர்கள் சிறுமிக்கு 18 வயது நிரம்பியதாகக் கூறி கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இந்த சோகம் அத்துடன் நிற்கவில்லை. மேலும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
சமூக ஆர்வலர் ஒருவர் சிறுமியின் இந்த பரிதாப நிலையைக் கண்டறிந்து காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 30 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.