பிச்சை எடுத்து நாய்களுக்கு உணவளிக்கும் கோவை பாட்டி!

கொரோனா பரவல் காலத்தில் மனிதர்களுக்கே உணவு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கோவையைச் சேர்ந்த கௌரி பாட்டி கோவை பட்டீஸ்வரர் கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார். அவர் அவருடைய பசிக்காக பிச்சை எடுக்கவில்லை.

கோவிலுக்கு அருகில் இருக்கும் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்காக அவர் பிச்சை எடுத்து வருகிறார். 76 வயதான கௌரி பாட்டி பிழைப்பதற்காக தனது கணவருடன் கோவைக்கு வந்துள்ளார். கணவர் காவலராக பணிபுரிந்தவர் மற்றும் கௌரி பாட்டி துப்புரவு பணியாளராக பணியாற்றியவர்.

தனது கணவர் இறந்த பிறகு யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது எனக் கருதி கோவை பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள வேலைகளைச் செய்தும் அங்கு பிச்சை எடுத்தும் அவரது வாழ்நாட்களை கழித்து வந்துள்ளார். தனக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் அந்தப் பகுதியில் திரியும் நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

இவ்வாறு நாய்களுக்கு உணவளிப்பதால் அந்தப் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதாகவும் அதனால் நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது எனவும் பலரும் மிரட்டுவதாகவும் அடிக்கவும் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் யார் என்னை என்ன செய்தாலும் நான் நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்தப் போவதில்லை எனக் கூறினார்.

இந்தப் பாட்டியின் இந்த மனித நேய செயலைப் பாராட்டி அங்கு கோவிலுக்கு வருபவர்களும் 100 மற்றும் 150 என பணம் அளித்து வருகின்றனர்.

நாய்களுக்கு உணவளிப்பது தனக்கு மன மகிழ்ச்சியைத் தருவதாக கௌரி பாட்டி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *