இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகள்!
நாகையை அடுத்த நாகூரில் மனைவி இறந்த செய்தியைக் கேட்டதும் அடுத்த 1 மணிநேரத்தில் கணவரும் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை பெரியார் நகரைச் சேர்ந்தவர் புயல்மணி அவரது மனைவி லட்சுமி. கடந்த சில நாட்களாக லட்சுமி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரன மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மனைவியின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்ட புயல்மணி அதிர்ச்சியினால் அடுத்த 1 மணி நேரத்தில் அவரும் இறந்தார். இறப்பிலும் பிரியாத இந்த தம்பதியின் இழப்பு அந்த பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.