திண்டிவனத்தில் ரசாயன ஆலையில் தீ விபத்து!

திண்டிவனம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் கடலூரைச் சேர்ந்த மாதவன் என்பவர் தின்னர் தயாரிக்கும் ரசாயன நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 35-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பேரல்களில் தின்னர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. 

நேற்று, அந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு உள்ள தின்னர்கள் எரியத் தொடங்கியுள்ளது. மூலப்பொருட்கள், மின்சாதன பொருட்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

செங்கல்பட்டு, தாம்பரம், திண்டிவனம், வானூர், விக்கிர வாண்டி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *