மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு!

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தினமும் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், போக்குவரத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் மெட்ரோ ரயில்கல் இயங்குமா? இல்லயா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் கடந்த 20ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுகிழமை (25ம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.
அதன்படி, விம்கோ நகர் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 1 மணி நேர இடைவெளியிலும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரை (ஆலந்தூர் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ வழியாக) 2 மணி நேர இடைவெளியிலும், செட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பரங்கிமலை மெட்ரோ வரை (ஆலந்தூர் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ வழியாக) 2 மணி நேர இடைவெளியிலும் இயக்கப்படும். நாள் முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச மணி நேரம் இல்லாமல் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.