ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலுக்கும் எதிர்ப்பு

இந்தியாவில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்வதற்காக வேதாந்தா குழுமம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் கூறி ஆலையைத் திறக்கலாம் என மத்திய அரசு உயர்நீதி மன்றத்தில் வாதிட்டது. ஆனால், தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்தலாமே என உச்ச நீதி மன்றம் கேட்டது. ஆனால், தமிழக அரசே ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடியில் இன்னும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடந்து வருகிறது.