தூய்மைப் பணியாளரின் நேர்மையால் நடந்த பெண்ணின் திருமணம்

சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த மோகன சுந்தரம், அந்தப் பகுதியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று, அவர் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொண்டிருந்த போது, ஒரு பையைக் கண்டெடுத்துள்ளார். அதைத் திறந்து பார்க்கையில் பத்து சவரன் நகை இருப்பதைப் பார்த்து அதிர்ந்துள்ளார்.

உடனடியாக, அருகில் உள்ள கொருக்குப் பேட்டை காவல் நிலையத்தில் பையுடன் நகையையும் ஒப்படைத்துள்ளார். அதே நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவர் தனது மகளுக்காக வைத்துள்ள நகைகளைக் காணவில்லை என அழுது கொண்டே புகாரளிக்க வந்துள்ளார்.

விசாரணையின் போது, மோகன சுந்தரம் கண்டெடுத்த நகை முனியம்மாளின் நகை என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, முனியம்மாளின் மகளின் திருமணம் சென்னை வடபழனி கோவிலில் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *