சார்பதிவாளர் அலுவலகங்களில் அமைக்கப்படும் திருமண மேடைகள்… திருமண ஆதரமாக பயன்படுத்திக்கொள்ளலாம்!

பதிவு திருமணம் செய்பவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கு ஆதாரமாக புகைப்படம் எடுத்துக்கொள்ள திருமண மணவறை அலங்காரம் சார்பதிவாளர் அலுவலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. அதில் பத்திரப் பதிவு மற்றும் திருமணப் பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.இங்கு பதிவுத் திருமணம் செய்து கொள்பவர்களில் பலர் அங்கேயே மாலை மாற்றிக் கொண்டு, புகைப்படம் எடுத்து ஆதாரமாக சமர்ப்பிப்பார்கள்.

இந்நிலையில், இவர்களின் வசதிக்காக 50 சார் பதிவாளர் அலுவலகங்களில் திருமண மணவறை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கரூரில் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம், கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் மணவறை அலங்காரம் நேற்று அமைக்கப்பட்டது.

இங்கு பதிவு திருமணம் செய்து கொள்பவர்கள் மணவறை அலங்காரத்தின் கீழ் மாலை மாற்றி புகைப்படங்கள் எடுத்து அதனை திருமண ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *