சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று அறுவைச்சிகிச்சைக்காக சென்னை அமைந்த கரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.

ஏற்கனவே, திட்டமிடப்பட்ட அறுவைச்சிகிச்சை என்பதால் நேற்று மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி இன்று சிகிச்சை முடிந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், மூன்று நாட்களுக்கு முழுமையாக ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *