கடலுக்குள் திருமணமா? வைரலாகும் திரெளபதி நடிகையின் புகைப்படம்!

திரெளபதி, மண்டேலா படங்களில் நடித்த நடிகை ஷீலாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ஷீலா. தொலைக்காட்சியில் நேரடியாக வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

நடிகை ஷீலா இதற்கு முன்னதாக டூலெட், திரெளபதி போன்ற படங்களில் நடித்துள்ளார். டூலெட் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பினை பெற்ற நிலையில் திரெளபதி திரைப்படம் பல பேசிய சர்ச்சையான கருத்துகளால் பல விமர்சனங்களை பெற்றது.

இந்தநிலையில் அவர் நடுக்கடலில் மாலையுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இதுகுறித்து விசாரித்ததில் கடந்த 2014ம் ஆண்டு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்பி சோழருடன் திருமணம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *