கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதியளிக்க முடியாது – உயர்நீதி மன்றம்
தமிழகத்தில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல கட்டுப்பாட்டு விதிமுறைகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன. அதில், கோவில் திருவிழாக்களும், திருமணம் போன்ற நிகழ்வுகளும் அடங்கும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், தல்லாகுளத்தைச் சேர்ந்த அருண் போத்திராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும் திரையரங்களுக்கு மட்டும் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பா? பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.”
இதனை விசாரித்த உயர்நீதி மன்றம் கொரோனா தொற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கபட வாய்ப்பு உள்ளதால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபத்திற்கு உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.