அரசு குடியிருப்பைக் காலி செய்ய மறுக்கும் சூரப்பா!

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா பதவி வகித்து வந்தார். இதனால், அவர் அரசு கொடுக்கும் குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில், சூரப்பாவின் பதவிகாலம் முடிந்துள்ளதால் அவர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய வேண்டும்.

அவர், குடியிருப்பை பதவி காலம் முடிந்த இரண்டு நாட்களில் காலி செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், சூரப்பா குடியிருப்பை இவ்வளவு சீக்கிரம் காலி செய்ய முடியாது. குறைந்தது இரண்டும் மாதங்களாவது வேண்டும் என தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் சென்னையில் தங்க வேண்டிய சூழல் உள்ளதால் இரண்டு மாதங்கள் அவகாசம் வேண்டும் என கூறியுள்ளார்.

சூரப்பா பதவியில் இருந்த போது, ரூபாய். 250 கோடி ஊழல் செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்த, கலையரசன் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. முதற்கட்ட விசாரணை நடத்திய கலையரசன் குழு, சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து, சூரப்பா மீதான முறைகேடு குறித்து 80% விசாரணை நிறைவடைந்து இருப்பதாகவும் அவர் எங்கு சென்றாலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், ஊழல் புகார்கள் குறித்து சூரப்பா முறையான பதில் அளிக்காவிடில் அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் கலையரசன் குழு தெரிவித்திருந்தது. ஓய்வு பெற்று எங்கு சென்றாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதி மன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *