சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாரில் முதல்கட்ட அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில், முதல்வர் பழனிச்சாமி ஈடுபடிட்ருந்த போது, பாதுகாப்பு பணிக்குச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. இதனால், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

மேலும், அவரை பாலியல் புகாரளிக்க விடாமல் தடுத்த எஸ்.பி கண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான புகார் குறித்து தலைமைச் செயலகத்தில் நடந்த விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.

இதனையடுத்து, அவர் மீதான புகாரை விசாரிக்க விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. சென்னையில், கடந்த 16 ஆம் தேதி முதல் விசாரணையை தொடங்கிய கமிட்டி இதுவரை 14 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜேஷ்தாஸுக்கு எதிரான புகார் குறித்து முதற்கட்ட அறிக்கையை தமிழக அரசிடம் விசாகா குழு தாக்கல் செய்துள்ளது. மேலும், இது முதற்கட்ட அறிக்கை தான் முழுமையான அறிக்கை பின்னர் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *