சாலையின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா? நெடுஞ்சாலைத் துறை விளக்கம்

 சென்னையில், பிரதான சாலையாக ரிப்பன் மாளிகையில் தொடங்கி, எழும்பூர், கீழ்ப்பாக்கம் வழியாக செல்லும் 14 கிலோ மீட்டருக்கு சாலை உள்ளது. இதற்கு, பெரியார் ஈ.வெ.ரா.சாலை என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்பதற்கு பதிலாக கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமக் நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே பதிவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை விளக்கமளித்துள்ளது. பெரியார் ஈவேரா சாலை பெயர் மாற்றப்படவில்லை. சென்னை மாநகராட்சி தரவுகளின்படி அந்த சாலை பெரியார் பெயரில் அழைக்கப்பட்டாலும், பிரிட்டிஷ் காலத்திலிருந்தே ஆவணங்களில் Grand Western Trunk Road என்றே உள்ளதாகவும், அதன்படியே இன்றும் அதே பெயரில் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *