மெட்ரோ ரயில்களில் இரு நாட்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை

விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவித கட்டணச் சலுகை அனுமதிப்பது வழக்கம். இதனையடுத்து, தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்றும் நாளையும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.