கோயில் திருமணங்களுக்கு கட்டுப்பாடு! இந்து அறநிலையத் துறை அறிவிப்பு
தமிழகத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, திருமணங்கள் மற்றும் கோயில் திருவிழாக்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, கோயிலில் நடைபெறும் திருமணங்களுக்கும் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். மேலும், 10 பேருக்கும் மேல் திருமணங்களில் பங்கேற்கக் கூடாது.
இது மட்டுமல்லாமல், கோயில்களுக்குச் சொந்தமான மண்டபங்களில் திருமணம் நடைபெறும் போது, 50 பேருக்கு மேல் அனுமதியில்லை என இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.