ஜக்கிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது! அறிவுக்கரசு ஆவேசம்

ஜக்கிவாசுதேவ் அண்மையில் கோயில்களை தனியார் மயமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அவரது, கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்பு நிலவியது.
இது குறித்து, திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தனது கருத்துகளை பிரத்யேகமாக நமது ‘தி நியூஸ் லைட் ’ யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், “கோயில்கள் அரசு கைகளுக்கு வரும் முன் வழிபாட்டு முறைகளிலும், கணக்கு வழக்குகளிலும் நிறைய ஊழல்கள் நடந்துள்ளன. அரசு வந்த பிறகு தான் வழிபாடுகள் முறையாக்கப்பட்டது. தனியார் வசம் மறுபடி சென்றால் கணக்கு வழக்குகள் முறையாக இருக்காது.
இந்த சூழ்நிலைகள் எல்லாம் ஜக்கிக்கு எப்படி தெரியும். அவருக்கு இருக்கும் பின்புலமே இருட்டைந்து உள்ளது ” என பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
முழு வீடியோவையும் பார்க்க கீழே உள்ள லிங்க்கைக் கிளிக் செய்யவும்.