சேலத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது!

சேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான், முயல் வேட்டையில் ஈடுபட்ட மாதையன், பெரியசாமி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மான், முயலை வேட்டையாடியதாக இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்,இது போன்று யாரேனும் சட்டவிரோதமாக வேட்டையாடுதலில் ஈடுபட்டுள்ளனரா எனவும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.