வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உயர் நீதி மன்றம் மறுப்பு
பிப்ரவரி மாதம் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது. இதனால், மற்ற சமூக்கத்தினர் தங்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட்டம் நடத்தினர். இன்னும் பலர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வரிசையில் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த அபிலேஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.