சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை – நீதிபதிகள் கவலை
திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் என்பவர், “திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால், தற்போது வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.
அதனை விசாரித்த நீதிபதிகள், ”தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிப்பது வேதனையளிக்கிறது. தமிழகம் தேசிய அளவிலான சுங்கக் கட்டண முறையை பின்பற்ற வேண்டும். ஃபாஸ்ட் டேக் முறை சாமானியர்களும் அணுகும் வகையில் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.