தேர்தலை புறக்கணிக்கிறாரா தோழர் தியாகு?
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. தேர்தல் நேரத்தில் பல தலைவர்கள் மற்ற தலைவர்களின் கொள்கைகளைப் பற்றியும், மத்திய அரசின் கொள்கைகளைப் பற்றியும் விமர்சிப்பது வழக்கம்.
அதன்படி, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தியாகு தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகள் மத்திய அரசின் கங்காணிகளாக இருக்கும் இந்த தேர்தல் முறையில் எந்த பலனும் இல்லை. முழுமையான மாநில சுயாட்சி பெறாமல் நம்மால் எந்த மாற்றமும் செய்யமுடியாது என்று தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தியாகு தெரிவித்துள்ளார். அதுவரை தேர்தல்களை புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளார்.
தேர்தல்முறை குறித்து அவர் தெரிவித்த மேலும் சில கருத்துகளை நமது ‘தி நியூஸ் லைட்’(thenewslite) யூடியூப் சேனலுக்கு தெரிவித்துள்ளார்.