தலைமைக்கான தேர்தலா? கொள்கைக்கான தேர்தலா?
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.
அதன்படி, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து அவரது பார்வையை நமது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார்.
மேலும், அவர் ”இந்த தேர்தலில் 5 தலைவர்கள் மட்டும் தான் போட்டியிடுவதாக கணக்கில் கொள்ள வேண்டும். இது கொள்கைக்கான தேர்தல் அல்ல தலைமைக்கான தேர்தல். அதில் யார் தலைவராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் நமது ‘தி நியூஸ் லைட்’(thenewslite) யூடியூப் சேனலுக்கு அளித்த முழு நேர்காணலை கேட்க காணொலியை பார்க்கவும்.