கள் தடை செய்ய வேண்டிய பொருளா? நல்லசாமி விளக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு ’கள்’ இயக்கத்தின் சார்பில் கொளத்தூர் மற்றும் எடப்பாடி தொகுதிகளில் சுயேட்சயாக தேர்தலில் கதிரேசன் போட்டியிடுகிறார். கள் தடை செய்ய வேண்டிய பொருள் அல்ல.
கள் மீது இருக்கும் தடையை நீக்க கோரி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை இழுக்கவே தேர்தலில் தமிழ்நாடு ’கள்’ இயக்கம் சார்பில் கதிரேசன் போட்டியிடுகிறார் என அதன் தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
கள் குறித்த பல தகவல்களை நமது ’தி நியூஸ் லைட்’ (thenewslite) யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு ’கள்’ இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தெரிவித்த பல கருத்துகளை இங்கு காணலாம்.