உங்கள் தொகுதி வேட்பாளரைப் பற்றி தெரிய வேண்டுமா? வந்து விட்டது அறப்போர் செயலி

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள்ன. இதில், நம் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோம் தானே. இதற்காகத் தான் புது ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆப் அறப்போர் இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதை முதலில் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், அதில் உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு, அவர்கள் மேல் உள்ள வழக்குகள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *