அதிமுக நிச்சயம் தோற்றுவிடும்! கருத்து கணிப்பு முடிவுகள் உண்மை ஆகுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நேரங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியாவது இயல்பு தான். அதன்படி, இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பல கருத்து கணிப்பு முடிவுகள் இந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர்கள் அரசியல் நிலைபாடுகள் எடுப்பது தவறல்ல என்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் என்று வரும் போது, கொள்கைகளில் தீவிரம் காட்ட இயலாது என்றும் ஃபெளிக்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது, பாஜகவை தீவிரமாக எதிர்த்து வரும் திமுக, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும், தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் பட்சத்தில் பாஜகவுடன் இணக்கமாகவே செல்லவே அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
மேலும், பல கருத்துகளை நமது ‘தி நியூஸ் லைட்’(thenewslite) யூடியூப் சேனலுக்கு தெரிவித்துள்ளார்.