திருத்தணியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
இந்நிலையில், இன்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.சென்னை தாம்பரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தலா 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.
வெயிலின் தாக்கத்தால் வேட்பாளர்களை மதியம் 12 முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.