காவல் துறையினருக்கு தபால் வாக்குபதிவு தொடக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அன்று நேரில் சென்று வாக்களிக்க முடியாதவர்களுக்காக தபால் வாக்குப் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
வயதானவர்களும், நோயாளிகளும், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு அதிகாரிகள், ஆசிரியர்கள் காவல் துறையினர் மற்றும் கொரோனா நோயாளிகளும் தபால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இன்று காவல் துறையினர் தபால் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர். பாதுக்காப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 1773 காவல் துறையினர் தற்போது வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.