திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர்

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தினர் பலர் வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கடலாடி, ஏர்வாடி, வாலிநோக்கம், இதம்பாடல், முந்தல், மாரியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ரஜினி மன்றத்தினர் 150க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இவர்கள் மட்டுமல்லாமல் 500 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணந்துள்ளனர். இவ்வாறு, ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைவது பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…