சிறப்பு டிஜிபி விசாரணைக்கு ஆஜர்!

முதல்வரின் பரப்புரையின் போது, பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது புகாரளிக்கப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

பெண் எஸ்.பியை புகாரளிக்க விடாமல் தடுத்ததாக மற்றொரு எஸ்.பி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் நேரில் ஆஜராகி விசாரணை முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று புகாரளிக்கப்பட்ட சிறப்பு டிஜிபி விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் நடைபெறும் விசாரணை குழுவில் ஆஜராகியுள்ளார். இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *