தொடரும் பட்டாசு விபத்துகள்! விருதுநகரில் சோகம்

விருதுநகர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டும் பட்டாசுகளுக்கு உலகம் முழுவதும் பிரபலமானது. ஆனால், அந்த பட்டாசை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே உள்ளது.
அண்மையில், சாத்தூர் அருகே உள்ள அச்சன் குளத்தில் இயங்கி வரும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காளையார்குறிச்சி பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இன்று மேலும் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் அப்பையநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைக்கு காலையில் தொழிலாளர்கள் வழக்கமாக பணிக்கு வந்துள்ளனர். பிற்பகலில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில், தொழிலாளி ஒருவர் பரிதாபமாகி உடல்கருகி உயிரிழந்துள்ளார்.