உச்சநீதி மன்றத்தின் அடுத்த நீதிபதி யார்?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது உள்ள எஸ்.ஏ பாப்டே ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இவருக்கு அடுத்து யார் தலைமை நீதிபதியாக வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள எஸ் ஏ பாப்டே பரிந்துரை செய்துள்ளார். மேலும், பரிந்துரைக் கடிதத்தை எஸ் ஏ பாப்டே மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். அனுமதி வழங்கப்படும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த நீதிபதியாக என்.வி ரமணா பதவியேற்பார்.