பள்ளி மாணவருக்கு எலித்தொற்று!
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவுமா? என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில், சேலத்தில் பள்ளி மாணவன் ஒருவனுக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மாதையன் குட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த டேனியல் ராஜ் என்ற மாணவர் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடுமையான காயச்சல் ஏற்படவே, ரத்த மாதிரிகள் சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் அவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடியிரிப்பு பகுதி, பள்ளி வளாகம் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.