எடப்பாடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரியர் மாணவர்கள்!

கொரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கல்லூரிகளில் உள்ள அரியர் மாணவர்களும் தேர்வெழுதாமலே தேர்ச்சி என பழனிச்சாமி அறிவித்தார்.
இதனால், பல வருடங்களாக அரியர் பேப்பர்களை க்ளியர் செய்ய முடியாத மாணவர்கள் தம் வாழ்நாள் வரை நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது, எடப்பாடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் முக்கிய வீதி வழியாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறார்.அப்போது, திடீரென, சாலை அருகே இருந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில் இருந்து, சிலர், முதல்வரை நோக்கி அழைப்பு விடுத்தனர்.
‘அரியர் பசங்க நாங்க, எங்க ஓட்டு இரட்டை இலைக்கே’ என்ற பதாகையை ஏந்தியபடி மாணவர்கள் நூதனமான முறையில் நன்றியை தெரிவித்தனர்.