கவிஞர் வைரமுத்துவின் ’நாட்படு தேறல்’ அப்டேட்!

100 பாடல்கள் 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் என்ற புதிய முயற்சியில் கவிஞர் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பு தயாராகி வருகிறது. இதன் புதிய முன்னோட்டம் இன்று வெளியிடப்படுகிறது.
இது குறித்து, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள வைரமுத்து ”86 வயது சுசிலா ஒரு பாடலும், 16 வயது உத்ரா உன்னிகிருஷ்ணனும் ஒரு பாடல் பாடியுள்ளார்” என அப்டேட் கொடுத்துள்ளார்.