தனியார் மயமாகத்திற்கு எதிரான வங்கி ஊழியர்களின் போராட்டம் தொடக்கம்!

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து, இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.மத்திய பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்; காப்பீடு துறையில், 74 சதவீதம், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி என்பது உட்பட, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை, இன்று துவக்குகின்றனர்.இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கக்கூடும்.இது குறித்து, வங்கி அதிகாரிகள், “இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில், நாடு முழுதும், 13 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால், சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள காசோலை, ‘கிளியரிங்’ மையங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும்.இரண்டு நாள் பொது விடுமுறை என்பதால், இன்று அதிக வர்த்தகம் பாதிக்கும். ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும்”என்று கூறியுள்ளனர்.