சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? -உயர்நீதி மன்றம் கேள்வி

அண்மையில், பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.சென்னை உயர்நீதிமன்றம், பெண் எஸ்.பியை புகார் கொடுக்க விடாமல் தடுத்த எஸ்.பி கண்ணனை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளீர்கள்.

அதுமட்டுமின்றி, எஸ்.பி. கண்ணனுடன் சேர்த்து கூண்டோடு காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர், காவலர்கள் 19 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம், பாலியல் குறித்து புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.யை தடுத்தார் என எஸ்.பி. கண்ணனை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளீர்கள். ஆனால் இன்னும் பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்படாதது ஏன்? என்று உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். முதலில் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டியவர் சிறப்பு டிஜிபி தான். பெண் எஸ்.பி.யை தடுத்தவர் வெறும் அம்பு மட்டுமே. அம்பு மீது நடவடிக்கை எடுத்த அரசு, எய்தவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேரில் வலியுறுத்தியபோதும் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு அதிகாரம் படைத்தவரா சிறப்பு டிஜிபி என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காவல் அதிகாரி மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கவனிக்கும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் உயரதிகாரி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…