தயக்கமன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் – தமிழக முதல்வர்
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செலுத்திக்கொண்டார். இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கூறி அறிவுறுத்தினர்.
இந்த பேட்டியில், ” கொரோனா வைரஸ் நோய் எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ள தொற்று நோய். நோயில் இருந்து விடுபட அரசு தடுப்பூசி வழங்கி வருகிறது. அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2682 அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 924 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போதுவரை 30.47 இலட்சம் கோவிட்சீல்டு தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. 11 இலட்சம் பேர் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எதோ ஒரு காரணத்திற்காக நாம் தினமும் வெளியே சென்று வர வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா பரவும் சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மக்கள் கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இனிவரும் காலங்களிலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.