இன்று கூகுள் டூடுலில் இடம்பெற்றவர் யார்?

கூகுள் எப்போதும் தன் முகப்புப் பக்கத்தில் முக்கிய நாள்கள், வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாள்கள் வரும்போது, அவர்கள் தொடர்பான டூடூல் ஒன்றை வைத்து மரியாதை செலுத்தும். அப்படி இன்று (10-03-2021), இந்தியாவின் மூத்த விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவை நினைவுகூர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு மறைந்த இவருக்கு இன்று 89 ஆவது பிறந்த நாள். இதனால், அவரை நினைவுகூரும் வகையில் கூகுள் தன் டூடூலை வைத்து அவருக்கு மரியாதை செய்துள்ளது.

இஸ்ரோவின் முன்னாள் தலைவரான உடுப்பி ராமச்சந்திர ராவ்,  அரசின் உயரிய பத்ம விருதுகளான ’பத்மபூஷன்’, ’பத்மவிபூஷன்’ விருதுகளைப் பெற்றுள்ளார். 1984 முதல் 1994வரை இஸ்ரோவை வழிநடத்திச் சென்றவர், இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவை ஏவுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

கர்நாடகாவின் ஒரு குக்கிராமத்தில் 1932-ம் ஆண்டு பிறந்த இவர், காஸ்மிக் கதிர் (அண்டக் கதிர்) பற்றி ஆராய்ச்சி செய்யும் இயற்பியலாளராக தன் பணியைத் தொடங்கினார். ’இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளின் தந்தை’ எனப் போற்றப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் வழிகாட்டலில் பணியாற்றிய ராமச்சந்திர ராவ், முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நாசாவிலும் பணியாற்றினார்.

இந்தியாவிற்கு 1966-ம் ஆண்டு திரும்பியவர், அகமதாபாத்தில் இயங்கிவரும் விண்வெளி தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் ஒன்றில் வானியல் தொடர்பான படிப்பொன்றைத் துவங்கி வைத்தார். 1972-ம் ஆண்டு முதல் இந்தியாவின் செயற்கைக் கோள் தொடர்பான ஆராய்ச்சிகளில் பங்கெடுத்தவர், 1975-ம் ஆண்டு இந்தியா ஏவிய முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவின் வெற்றியில் பெரும் பங்காற்றினார். அதன் பின்னர் 1984-94வரை இஸ்ரோவின் தலைவராக தன் பணியைத் திறம்படச் செய்துள்ளார். இதனால், கூகுள் இவரை பிறந்தநாளன்று பெருமைபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…