ரயில் பயணங்களுக்கு புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்!

விரைவான, பாதுகாப்பான ரயில் பயணம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், ரயில் பயணங்களின்போது பயணிகள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள ஹெல்ப்லைன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 139 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தற்போது நடைமுறையில் உள்ள 182 என்ற ஹெல்ப்லைன் எண் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியிருக்கிறது. அதற்கு பதிலாகவே 139 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் அறிவித்துள்ளது
இந்த புதிய உதவி எண்ணை பயன்படுத்தினால் 12 மொழிகளில் சேவை கிடைக்கும் என்றும் இந்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ள ஸ்மார்ட்போன் தேவையில்லை என்றும் அனைத்து விதமான போன்களையும் பயன்படுத்தி அழைக்கலாம் எனவும் கூறினார்.
இந்த புதிய ஹெல்ப்லைன் எண்ணுக்கு பயணிகள் தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் பழைய எண்ணான 182 ல் இருந்து 139க்கு உதவி எண் ஏன் மாற்றப்பட்டது என்பதற்கான காரணத்தை ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இந்த உதவி எண் திட்டம் ரயில் பயணிகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.