இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கான தொகுதிகள் முடிவு!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் செய்திளாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ”எங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.
கடையநல்லூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருவாடனை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம் மற்றும் சென்னையில் ஒரு தொகுதி என தாங்கள் போட்டிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் தெரிவித்தோம், அவற்றுள் கடையநல்லூர் தொகுதி மட்டும் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், மற்ற 2 தொகுதிகளும் விரைவில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று திமுக தரபில் தெரிவித்ததாகவும் காதர் மொய்தீன் கூறினார்.