அப்துல் கலாமின் சகோதரர் மறைவு!

104 வயதைக் கடந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் நேற்று மாலை காலமானார்.

வயது மூப்பின் காரணமாக, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முகமது முத்து மீரான் மரைக்காயரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் அப்துல் மீரான் மரைக்காயர் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் குறிப்பை பதிவு செய்துள்ளார்

இதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன்.

கலாம் அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *