தேர்தலையொட்டி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சட்டப்பேரவை த் தேர்தல்  ஏப்ரல்6 அன்று நடக்க உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12 என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்குள் தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வை முடித்துவிட அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் மகா கூட்டணி அணிவகுத்து நிற்கிறது.

மறுபுறம் அமமுக, மநீக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் விசிக, மமக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மதிமுகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இதில் வேட்பாளர் தேர்வு, தொகுதி செல்வாக்கு, கூட்டணிக்கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பது, திமுகவின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பேசப்பட்டதாகவும், வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்தும் பேசப்பட்டதாவும் தெரிகிறது. கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…