தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு!

 தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி இன்று (மார்ச் 4) காலமானார்.

இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக, முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நாளிதழ் ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றியுள்ளார். தமிழகத்தின் தென்கோடியான குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 18.01.1933-ல் பிறந்தார் . இவரது தந்தை ஸ்ரீ டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பேற்ற கிருஷ்ணமூர்த்தி தினமலர் நாளிதழை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்க காரணமாக இருந்தார். 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார்.

இவர் சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்து பெரும் ஆய்வு மேற்கொண்டவர். நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் முதன் முதலில் கண்டவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர். நாணயவியல் தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…