தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை – அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழகத்துக்கான சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு எதிராக மூன்றாவது அணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியுடன் போட்டியிடும் என சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது ஆம் ஆத்மியின் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்தின் சட்ட மன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.