அனைத்திற்கும் காரணம் தினகரனே – சசிகலா சகோதரர் குற்றச்சாட்டு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக – அமமுக மீண்டும் இணைக்கப்படுமா? என பேசப்பட்டு வந்த நிலையில் சசிகலா தனது அரசியல் ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டியளித்துள்ளார். அவர், ”சசிகலாவின் முடிவை முழு மனதாக வரவேற்கிறேன். துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். அவரைச் சுற்றியுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரால் தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம்.

டிடிவி தினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தினகரன் பேசியது இணைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்திருக்கும்.

இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலாவின் விருப்பப் படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…