பெரியார் சிலைக்கு காவி சால்வை; கே.எஸ்.அழகிரி கண்டனம்

தஞ்சாவூர் அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு, தொப்பி அணிவிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் காவி துணி மற்றும் தொப்பி அணிவித்துள்ளனர்.

இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதில், “பெரியார் கொள்கைகள் பீடுநடை போடும் பூமியாக தமிழகம் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத பாசிச, பிற்போக்கு எண்ணம் கொண்ட வகுப்புவாத சக்திகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்”என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *