தொடர்ந்து அதிகரிக்கும் காஸ் சிலிண்டர் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி சமையல் காஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், மத்தியப் பிரேதசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டர் விலை  கடைசியாக கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.810-க்கு விற்கப்பட்டது.

கடந்த மாதத்தில் மட்டும் மூன்று முறையாக ரூபாய் 100 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் சிலிண்டர் விலை  மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.835க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…