சரியான வேலை இல்லை… திருமணம் கைகூடவில்லை… இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

சென்னை ஆவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வேலை கிடைக்காததால், திருமணம் தள்ளி சென்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆவடி அருகே திருவள்ளூர் நகரிலுள்ள அன்பர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (31). இவர் டிப்ளமோ  இன்ஜினியர். திருமணமாகவில்லை. பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைகேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். இருப்பினும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனிடையே சுரேசுக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் சரியான வேலை இல்லாததால் சரியான பெண் அமையவில்லை.

இதன்காரணமாக சுரேஷ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற சுரேஷ் இன்று அதிகாலை வரை வெளியே வரவில்லை என்றதும் பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது சுரேஷ் இறந்து கிடந்தார். அவரது வாயில் இருந்து நுரை பொங்கியிருந்தது. அவரது சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி, இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ‘’சரியான வேலை கிடைக்காததாலும் திருமணம் ஆகாத விரக்தியில் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்’ என்று தெரியவந்தது. இதன் அடிப்படையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…